மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2024, 10:27 am

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…பலத்த போலீஸ் பாதுகாப்பு!

தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு மதுரையில் தங்கிய நிலையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகிறார.

இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் மீனாட்சி அம்மன் கோவில் பிரதான நுழைவாயிலான கிழக்கு கோபுர அஷ்டசக்தி மண்டப வாசல் பகுதி வழியாக காலை 9 மணி முதல் 10 மணி வரை பக்தர்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீனாட்சி அம்மன் கோவிலுக்க சாமி தரிசனம் மேற்கொண்டுவருகிறார். கோவில் சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது

  • Nayanthara calls off Lady Super Star லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?