மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் : பன் மாலை அணிந்து I.N.D.I.A கூட்டணி ஆர்ப்பாட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2024, 7:11 pm

அண்மையில் கோவையில் நடந்த சிறு குறு தொழில் அமைப்புகளுடன் நடந்த ஜிஎஸ்டி கருத்து கேட்பு கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி முரண்பாடால் உணவக உரிமையாளர்கள் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மறுநாள் அன்னபூர்ணா சீனிவாசன் நிதியமைச்சரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோவை பாஜகவினர் வெளியிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் நிதி அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தியா கூட்டணி கட்சி சார்பில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க: விஜய் கட்சியுடன் கூட்டணி இல்லை.. 2026லும் தனித்து தான் போட்டி : சீமான் அறிவிப்பு!

இதில் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் மற்றும் முற்போக்கு அமைப்பினர் கலந்து கொண்டு நிதி அமைச்சர் மற்றும் பாஜகவினரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பன் மாலை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் அதேபோல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடமும் தொழில் அமைப்பினரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க வேண்டும் எனக் கூறியும் கோஷங்களை எழுப்பினர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி