ரேஷன் கடை பருப்பில் தவழும் புழு… மாற்றித் தருமாறு கேட்டால் அதிகாரிகள் அலட்சியம் ; அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
27 January 2024, 1:14 pm

ரேஷன் கடையில் விநியோகிக்கப்படும் பருப்பில் புழு இருப்பதாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெடுமுடையான் கிராமப் பகுதியில் அரசு நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பருப்புகளில் நனைந்த கட்டிகள் மற்றும் புழுக்கள் உள்ளதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் புழுக்கள் இருக்கும் பருப்புகளை மாற்றி தருமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அப்பகுதி கிராம மக்கள் பலமுறை சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்தான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…