தரமற்ற முறையில் கழிவுநீர் வாய்க்கால் ; வேடிக்கை பார்த்த திமுக ஒன்றிய கவுன்சிலர்… அமைச்சரின் தொகுதியில் நடக்கும் அவலம்..!!

Author: Babu Lakshmanan
13 June 2023, 9:55 pm

அதிகாரிகள் இல்லாமல் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி கான்கிரீட் கற்களுக்கு பதிலாக, பெரிய பெரிய பாறை கற்களை போட்டு மேலே கலவை போட்ட ஒப்பந்தக்காரரின் பாதுகாப்புக்கு திமுக ஒன்றிய கவுன்சிலர் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பண்ணபட்டி ஊராட்சி. ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் பொது நிதி டெண்டர் விடப்பட்டு, பண்ணப்பட்டி செல்லும் சாலையில் குடியிருப்பு பகுதிகளில் வரும் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதற்காக சுமார் 4,50,000 ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த பணியானது இன்று துவங்கியது. துவங்கிய சில மணி நேரத்தில் பணிகள் முடிவடையும் நிலைக்கு திமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் பிரம்மசாமி தலைமையில் பணிகள் வேகமாக நடைபெற்றது. இதில், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் மற்றும் ஒன்றிய சார்ந்த அரசு அதிகாரிகள் யாரும் இல்லை. மேலும், பழைய கழிவுநீர் வாய்க்காலை தோண்டி அதில் உள்ள கற்களை சிமெண்ட் கான்கிரீட் உடன் கழிவு நீர் வாய்க்கால் சைடு கைப்பிடி சுவருக்கு அமைப்பதற்கு உள்ளே போட்டு, காங்கிரீடுகளை கொட்டுகின்றனர்.

வாய்க்காலில் தோண்டப்பட்ட கற்கள் தெரியாத அளவிற்கு காங்கிரீட் கொட்டி வருகின்றனர். பொதுமக்கள் கேள்வி கேட்டால் நான் ஆளும் கட்சி அப்படித்தான் செய்வேன் என்றும். திமுக ஒன்றிய கவுன்சிலர் பிரம்மசாமி, நாற்காலி போட்டு பணி நடைபெறும் இடத்தில் அமர்ந்து பணியை செய்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் சொந்த தொகுதியான ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பண்ணபட்டி ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் தரமற்ற முறையில் கழிவுநீர் வாய்க்காலை அமைத்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தொகுதியில் ஊரக வளர்ச்சித்துறை நிதியில் நடைபெறும் பணியிலேயே முறைகேடுகளை திமுக கட்சியினர் செய்து வருவது இப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியும் அச்சமும் ஏற்படுத்தியுள்ளது.

  • Suchi Leaks நயன்தாரா தனுஷ் லீக்ஸ் விரைவில் வரும் …சவால் விட்ட பாடகி சுசித்ரா..!ஒரு வேளை அதுவா இருக்குமோ..?
  • Views: - 344

    0

    0