மருமகள் மீது தீராத மோகம்… தவறாக நடக்க முயன்ற மாமனார் : மகன் எடுத்த விபரீத முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan5 April 2025, 12:11 pm
தூத்துக்குடி பாத்திமா நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராஜ் (56) மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர் தற்போது மகிழ்ச்சிபுரம் மேற்கில் தனது மனைவியுடன் குடியிருந்து வருகிறார்.
இவருக்கு 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் ஜேம்ஸ் (33) தூத்துக்குடி அண்ணாநகர் 6வது தெருவில் தனது மனைவியுடன் குடியிருந்து வருகிறார்.
இதையும் படியுங்க: ED நுழைந்து எல்லா தகவலையும் எடுத்திட்டு போயிட்டாங்க.. இனி திமுக கதை க்ளோஸ் : அதிமுக பிரமுகர் பேச்சு!
இந்நிலையில், ஜேம்ஸ் அடிக்கடி குடித்துவிட்டு பெற்றோரிடம் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது, இதைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் தனியாக 1ம் கேட் பகுதியில் குடியிருந்து வந்துள்ளனர்.
அங்கு சென்றும் அவரது மகன் ஜேம்ஸ் பிரச்சனை செய்ததால் அங்கிருந்தும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இடம் மாறி மகிழ்ச்சிபுரம் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகிழ்ச்சிபுரம் சென்ற ஜேம்ஸ் தனது மனைவியிடம் தவறான எண்ணத்துடன் பேசினாயா என தந்தையிடம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தந்தை ராஜை வழிமறித்து தகராறு செய்துள்ளார்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென்று சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீனவர் ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட ஜேம்ஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
