பருவம் தவறிய மழை பொழிவுக்கு காரணம் இளைஞர்கள்தான்.. மதுரை ஆதீனம் கருத்தால் சலசலப்பு!
Author: Udayachandran RadhaKrishnan16 October 2024, 1:36 pm
பருவம் தவறிய மழைக்கு இளைஞர்கள் தான் காரணம் என மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறினார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள திருவுருவ சிலைக்கு மதுரை ஆதினம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;
இன்றைய தலைமுறைகள் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். தொடர்ந்து இளைஞர்களுக்கு அரசு விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து மதுரை ஆதினம் சார்பாக விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன் அவர்கள் இல்லை என்றால் நான் இன்று இல்லை.

தமிழகத்தில் இன்றைக்கு பருவம் தவறிய மழைக்கு இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் காரணம், கோவில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை தொகையை செலுத்துவதில்லை என்று கூறினார்.
தொடர்ந்து நடிகர் விஜய் குறித்தான கேள்வியை செய்தியாளர் எழுப்பிய உடனே இடத்தை விட்டு நகர்ந்து சென்றார் மதுரை ஆதினம்.