அதிக மதிப்பெண் தருவதாக கூறி பேராசிரியர் அட்டூழியம்.. மாணவிகளுடன் இருந்த ஆபாச வீடியோக்கள் பறிமுதல்!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2025, 8:58 am

அதிக மதிப்பெண் வழங்குவதாக கூறி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த பேராசிரியரின் காம லீலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரி பேராசியர் ரஜ்னிஷ் குமார். 50 வயதாகும் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

மேலும் பாலியல் வீடியோக்கம் இணையத்தில் வைரலாகி வரும் நிலயில் லக்னோ போலீசார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2008ஆம் ஆண்டு முதல் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக சில்மிஷங்களை செய்துள்ளார். 2009ஆம் ஆண்டில் மாணவியிடம் உல்லாசமாக இருந்த அவர், அதிக மதிப்பெண் போடுவதாகவும், ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளார்.

இதையும் படியுங்க : தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்.. தமிழில் மருத்துவம், பொறியியல் படிக்க ஏற்பாடு : அமித்ஷா பேச்சு!

இதை நம்பி சில மாணவிகள் அவருக்கு பணமும் கொடுத்து ஏமாந்துள்ளனர். மாணவிகளிடம் நெருக்கமாக இருந்த வீடியோக்களை பாதுகாக்க சாப்ட்வேர் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

ஆபாச வலைத்தளங்களுக்கு பேராசியர் விற்றுள்ளதும் அம்பலமாகியுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள பேராசியர் ரஜ்னிஷ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். எத்தனை மாணவிகள் பேராசியரால் பாதிக்கப்ப்டடுள்ளார் என்பது தெரியவில்லை.

ஏமாந்த மாணவிகள் புகார் கொடுப்பதாக கூறினால், ஆபாச வீடியோக்களை காண்பித்து மிரட்டுவது பேராசிரியரின் வாடிக்கை. ரஜ்னிஷ் குமாருக்கு 1996ல் திருமணம் நடந்த நிலையல் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

UP Professor, Accused Of Raping Students, Arrested After 72 Hours On The Run

இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை, 2001ஆம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த அவர் புவியியல் துறை தலைவராக உயர்வு பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. மாணவிகளிடம் இது குறித்து ரகசிய வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர் போலீசார்.

  • தரமான சம்பவம்.!ராபின்ஹூட் படத்தில் ‘டேவிட் வார்னர்’ நடிக்கும் ரோல் என்னனு தெரியுமா.!
  • Leave a Reply