கோவையில் 24 மையங்களில் நடைபெறும் யுபிஎஸ்சி தேர்வு : இரு பிரிவுகளாக நடைபெறும் தேர்வுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2022, 10:28 am

கோவை : யுபிஎஸ்சி தேர்வு கோவையில் 24 மையங்களில் நடைபெறுகிறது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் மேற்கொள்ளப்படும் யுபிஎஸ்சி தேர்வு இன்று நடைபெறுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் 24 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

இந்த தேர்வினை 9447 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்விற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் துணை ஆட்சியர் நிலையில் 8 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள் வட்டாட்சியர் நிலையில் 24 தேர்வு மையங்களுக்கு தேர்வு மைய ஆய்வு அலுவலர்களும் துணை வட்டாட்சியர் நிலையில் 40 தேர்வு மைய துணை கண்காணிப்பாளர்களும், 414 வரை கண்காணிப்பாளர்களும் மாவட்ட நிர்வாகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேர்வானது முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. மேலும் தேர்வு மையங்களுக்கு போதுமான அளவில் உக்கடம் கவுண்டம்பாளையம் சிங்காநல்லூர் சூலூர் பொள்ளாச்சி போன்ற புறநகர் பேருந்து நிலையங்களில் இருந்தும் வெளி மாநிலம் மற்றும் மாவட்ட தேர்வுகளுக்கும் பேருந்து வசதியானது மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…