UPSC தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை… நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற சிவச்சந்திரன் முதலிடம்!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2025, 5:29 pm

யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி நடத்தி வருகிறது.

முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு என்ற 3 படிகள் கொண்ட இந்த தேர்வில் 2024ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் https://upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த முறை 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், அதில் தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற மாணவர் தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இந்திய அளவில் 23ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

சிவச்சந்திரன் நான் முதல்வன் திட்டம் மூலம் இந்த தேர்வுக்காக பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் கூறும் போது, யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி, நான் முதல்வன் திட்டம் இதற்கு உதவியாக இருந்ததாக கூறினார்.

இதே போல 39வது இடத்தில் மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டம் மூலம் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?
  • Leave a Reply