நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : சாக்கடையை சுத்தம் செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்கள்….

Author: kavin kumar
9 February 2022, 5:44 pm

திருச்சி : திருச்சியில் சாக்கடையை சுத்தம் செய்து பாஜக வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

திருச்சி மாநகராட்சி 12வது வார்டு, 15வது வார்டுக்கு உட்பட்ட புதுத்தெரு, பூசாரி தெரு, பதுவை நகர் உள்ளிட்ட வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் சிலர் தூய்மை இந்தியா திட்டம் என்று பிரச்சாரம் செய்கிறீர்கள், ஆனால் எங்கள் பகுதியில் நீண்டகாலமாக கழிவுநீர் சாக்கடை கூட சுத்தம் செய்யப்படாமல் உள்ளது மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ன குற்றம் சாட்டி, எப்படி உங்களுக்கு ஆதரவு அளிக்க முடியும் என மக்கள் கேள்வி எழுப்பினர்.

உடனே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகருடன் 12 வது வார்டில் போட்டியிடும் நவநீதகிருஷ்ணன், 15வது வார்டில் போட்டியிடும் நாகவல்லி மற்றும் கட்சியினர் வேகமாக சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இந்த பகுதிகளில் இதுபோன்று சாக்கடை அடைப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்து சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டனர். பாஜகவினருக்கு இந்த திடீர் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ