ஒப்பந்தங்களை ஒதுக்குவதற்கு முன்பு நிறுவனங்களின் தன்மையை ஆய்வு செய்க ; தமிழ்நாடு ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம்!!

Author: Babu Lakshmanan
24 August 2023, 2:39 pm

அரசுத் துறைகளில் ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தகுதியானவை தானா..? என்று ஆய்வு செய்தால், பெரும் விபத்துகளை தவிர்க்க முடியும் என்று தமிழ்நாடு ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் செயலாளர் கே.சி.பி. சந்திரபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இது தொடர்பாக அவர் கூறியதாவது:- உள்கட்டமைப்பு திட்டங்கள், சாலை மற்றும் பாலம் கட்டுமானப் பணிகள், மாநில தேசிய நெடுஞ்சாலைகள், இந்திய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), பொதுப்பணித் துறை, மாநகராட்சிகள், மாநகராட்சிகள், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் நலன்களை கருத்தில் வைத்து ஒப்பந்தங்களை ஒதுக்குவதில் நியாயமான செயல்முறையை கையாள வேண்டும்.

மேலும், தகுதியில்லாத ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கும் போது, சாலையில் விரிசல்கள், தரமில்லாத பாலங்கள் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உதாரணமாக, மிசோரம் மாநிலம் சாய்ராங்கில் நேற்று நடந்த ரயில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில், ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எனவே, வீடு மற்றும் பாலம் போன்ற முக்கிய கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுபவங்கள், சாதனைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இதன்மூலம், தரமுள்ள நிறுவனங்களை கண்டறிந்து, ஒப்பந்தங்களை ஒதுக்குவதன் மூலம், இதுபோன்ற பேரிடர்களை தவிர்க்க முடியும்.

குறிப்பாக, ஒப்பந்தங்களை ஒதுக்குவதில், தகுதிகள் மற்றும் தொழில்துறை நம்பகத்தன்மை இல்லாத நிறுவனங்களுக்கு எந்த விதமான தயவும் காட்டக்கூடாது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுத் துறைகள் ஒப்பந்த ஒதுக்கீட்டில் உள்ள சிக்கல்களைச் சரி செய்யவும், விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய முனைப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரத்தில் குறைபாடுகள் உள்ள நிறுவனங்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு மாநிலமும், நாடும் முன்னேற்றத்திற்காக பாடுபடும் வேளையில், ஒப்பந்த செயல்முறைகளில் சமரசம் இல்லாமல்,மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் இருப்பது அவசியம், எனக் கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 408

    0

    0