தாய்மொழியுடன் இன்னொரு மொழியை கற்பது அவசியம் : பேச்சுவாக்கில் திமுகவுக்கு ஆளுநர் தமிழிசை அட்வைஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan7 May 2022, 1:38 pm
கோவை : ஓராண்டு நிறைவு பெற்ற தமிழக அரசுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் நிகழ்ச்சியில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன் தற்போது மேடையில் பேசிய அவர், இந்தக் கூட்டத்தில் உள்ளவர்கள் எத்தனை பேருக்கு தமிழ் தெரியும் என கேட்ட அவர் தமிழ் புரிந்து கொள்ள கூடியவர்கள் எத்தனை பேர் என மேடையில் இருந்து கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர் தாய்மொழியை ஊக்கப்படுத்த வேண்டும், தாய் மொழியை கற்று இன்னொரு மொழியை கற்று கொள்ளுங்கள்,ஆங்கிலம் கலக்காத தமிழைப் பேசி பழகுவது நல்லது என தெரிவித்த அவர் பிறந்த குழந்தை 6 மாதத்திற்கு தன்னுடைய அம்மாவின் தாய்ப்பாலை குடிப்பதால் தாயின் சொல்லை கேட்பார்கள்.
இப்போதெல்லாம் தாய்ப்பாலை குடிப்பதில்லை கன்று குட்டியின் பாலைத்தான் குடிக்கிறார்கள். அதனால்தான் இளைஞர்கள் தாயின் சொல்லைக் கேட்காமல் டாஸ்மாக்கில் போய் குடிக்கிறார்கள் எனவும் 10 கோடி பேர் இந்தியாவில் போதைக்கு அடிமையாக உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், ஓராண்டு நிறைவு பெற்ற தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். திராவிட மாடல் போல திராவிட மாதிரி என இருந்தால் சரியாக இருக்குமோ? தாய்மொழியில் முழுமையாக இருக்க வேண்டும். திராவிட மாடல் (ஆங்கில சொல்) என்று சொல்வதற்கு திராவிட மாதிரி (தமிழ் சொல்) என சொன்னால் சரியாக இருக்குமோ என்பது ஒரு சின்ன யோசனை.
மற்ற மொழியை வேண்டாம் என சொல்வதற்கு நம்ம மொழியை முழுவதுமாக கற்றுக்கொள்வோம். புதிய கல்விக் கொள்கையில் அதிக மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து என தெரிவித்தார்.