கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணக்கம்அன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய அனைத்திந்திய அண்ணா திமுக நண்பாகளுக்கும் பாசத்திற்குரிய பத்திரிக்கையாளாகளுக்கும் எனது பணிவான வணக்கங்கள் ….
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முழு ஈடுபாட்டுடன் அயராது பாடூபட்டு வந்தேன்.
இதையும் படியுங்க: ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!
கடந்த 20 ஆண்டு காலம் அதிமுகவில் முழு அளவில் உண்மையுடன் உழைத்து வந்தேன், கட்சியின் உத்தரவை கடமை தவறாமல் கடைபிடித்து காத்து வந்திருக்கிறேன். அதிமுக கட்சி பணியில் எள்ளளவும் சுணக்கம் வராமல் எதிர்பார்பபு இன்றி பணியாற்றி இருக்கிறேன்.
மக்களுக்கான சேவை பணிகளிலும் மக்களோடு மக்களாக நின்று போராடி இருக்கிறேன். கட்சிக்காக நான் செய்த பணிகள் அனைவரும் அறிந்ததே. தற்போது எனது தனிப்பட்ட பணி காரணமாக தொடாந்து கட்சிப் பணியில் என்னை ஈடூபடுத்திக்கொள்ள முடியாத சூழல் இருக்கிறது. எனவே கட்சியின் அனைத்து வித பொறுப்புகளில் இருந்தும் என்னை முழுமையாக விடுவித்து கொள்கிறேன். கட்சியிலிருந்து விலகும் முடிவை பலத்த தயக்கத்துடன் கனத்த இதயத்துடன் எடுத்திருக்கிறேன்.
கட்சியில் எனக்கு வாய்ப்பு அளித்த அங்கீகாரம் மற்றும் ஆதரவு வழங்கி திறம்பட பணியாற்ற ஊக்கம் தந்த மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா, மாண்புமிகு எதாக்கட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திமுக பொதுச்செயலாளா எடப்பாடியார் மற்றும் மாண்புமிகு முன்னாள் அமைச்சா அண்ணன் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தனை ஆண்டு காலம் என்னுடன் பணிபுரிந்த கழகத்தின் நாவாகிகள், மூத்தவாகள் மற்றும் கோவையில் எனது தோளோடு தோள் நின்று துடிப்புடன் பணியாற்றிய கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.