உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் கிடையாதா.? அப்போ யார்.? மாரி செல்வராஜ் படம் குறித்த கசிந்த புதிய தகவல்.!

Author: Rajesh
6 July 2022, 4:47 pm

மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிதாக உருவாகிவரும் திரைப்படம் மாமன்னன். இப்படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

மூன்று கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. மாமன்னன் படத்தில் வடிவேலு நடிக்கும் கதாபாத்திரம் குறித்த புதிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி இப்படத்தில் மாமன்னனாக உதயநிதி நடிக்கவில்லையாம். அது வடிவேலுவின் கதாபாத்திரம் என்றும், அவருக்கு மகனாகத்தான உதயநிதி நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. வடிவேலுவுக்கு எதிரியாக அழகம்பெருமாள், அவரின் வாரிசாக பகத் பாசில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. வித்தியாசமான அரசியல் கதைக்களத்துடன் இப்படத்தை மாரி செல்வராஜ் படமாக்கி வருகிறாராம். இப்படத்தில் கதையின் நாயகனாக வடிவேலு நடிக்கிறார் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் தான்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி