தம்பட்டம் அடித்த வடிவேலு.. சத்தமில்லாமல் அதைச் செய்யும் பிரபல நடிகர்.!

Author: Rajesh
23 May 2022, 6:41 pm

ஆரம்ப காலங்களில் நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுக்கு சிறுசிறு கதாபாத்திரங்கள் கொடுத்து தூக்கி விட்டார். கொடுத்தார். அதன் பிறகு வடிவேலு மதுரையில் இருந்து வந்ததால் விஜயகாந்த் தான் நடிக்கும் படங்களில் வாய்ப்புகள் கொடுத்து வந்தார்.

அதன் பிறகு வடிவேலு நடிக்கும் கதாபாத்திரம் பலராலும் கவரப்பட்டது. கவுண்டமணி, செந்தில் காமெடிகளை ஓவர்டேக் செய்து வடிவேலு எல்லா படத்திலும் கமிட்டாகி நடித்து வந்தார். இதனிடையே ராஜ்கிரன் பொருளாதார நெருக்கடியில் இருந்த போது வடிவேலுவை சந்தித்ததாக கூறப்படுகிறது.

அப்போது ராஜ்கிரன் கேட்காமலேயே வடிவேலு 5 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். ஆனால் அதன்பிறகு சினிமா பிரபலங்களிடம் ராஜ்கிரணுக்கு 5 லட்சம் கொடுத்ததை வடிவேலு தம்பட்டம் அடித்து கூறியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் தன் வறுமையில் இருந்ததை அறிந்த தானாக வந்து வடிவேலு பணத்தை கொடுத்துவிட்டு இப்படி என்னை அசிங்கப்படுத்துகிறார் என பலரிடம் ராஜ்கிரன் வருத்தப்பட்டுள்ளாரம்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார் குடும்பத்திற்கு உதவிகள் செய்து வருகிறார். மேலும் இந்த விஷயத்தை தயவு செய்து வெளியில் யாரிடத்திலும் சொல்லிவிட வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார். இருந்த போதிலும், அவர் செய்த உதவி தெரியவந்தது. சீனியர் நடிகரான வடிவேலு நடிகருக்கு செய்த உதவியை தம்பட்டம் அடித்த நிலையில் சிவகார்த்திகேயன் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பதைப்போல யாருக்கும் தெரியாமல் பல உதவிகள் செய்து வருகிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 889

    0

    0