வெள்ள அபாய எச்சரிக்கைக்கு செவி சாய்க்காத மக்கள்.. வைகை ஆற்றில் துணி துவைக்கும் பெண்கள் ; கண்காணிப்பார்களா அதிகாரிகள்..?

Author: Babu Lakshmanan
19 December 2023, 12:35 pm
Quick Share

வைகை ஆற்றின் கரையோரத்தில் ஆபத்தை உணராமல் பெண்கள் துணி துவைத்து வருவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் வைகை அணை உள்ளது. வைகை அணையில் 72 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். வைகை அணையில் இருந்து வரும் தண்ணீரானது, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கும் வைகை ஆலையில் இருந்து வரும் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் 13,145 கன அடி நீர் வைகை அணைக்கு வருகிறது. வைகை அணையின் உயரம் 72 அடி உள்ளது. தற்போது நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக 71 அடி தண்ணீர் நெருங்கி விட்டது. இதன் காரணமாக தேனி மாவட்டம் வைகை அணைப்பகுதியில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறவும், ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் கூடாது எனக் கூறி மூன்றாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, தற்போது ஆற்றில் 3169 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இன்று மாலைக்குள் அணையின் முழு கொள்ளளவை எட்டிவிடும். அதேபோல் நாளைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்றவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி, சிவஞானபுரம், மட்டப்பாறை, சித்தர்கள், நத்தம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக வைகை ஆறு மதுரையை நோக்கி செல்கிறது. பொதுமக்கள் வைகை ஆற்றப்படுகையில் மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், ஆற்றின் ஓரத்தில் அமர்ந்திருப்பதும், அதே போல் ஆற்றுக்குள் இறங்கி துணியும் துவைத்து வருகின்றனர்.

ஆற்று படுகையை பாதுகாக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அளிக்க வேண்டிய வருவாய் துறை அதிகாரிகள் யாரும் ஆற்றுப்படுகை பகுதியில் இல்லாததால் பொதுமக்கள் இயல்பாக ஆபத்தை உணராமல் வைகை ஆற்று படுகைக்கு சென்று வருகின்றனர்.

  • Napolean 6 மாதம் கழித்து மீண்டும் தனுஷுக்கு திருமணம் செய்வேன் – குண்டு தூக்கி போட்ட நெப்போலியன்!
  • Views: - 373

    0

    0