தொடர் கனமழையால் வைகை அணையில் பெரும் வெள்ளப்பெருக்கு ; பொதுமக்களுக்கு அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
11 November 2023, 9:26 am

வைகை அணையில் வெளியேற்றப்பட்ட உபரிநீரால், யானைக்கல் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை 71 அடி உயரம் கொண்ட வைகை ஆறு முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வைகை ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யானைக்கல் தரைப்பாலம் அருகே வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்லூர் மற்றும் ஆரப்பாளையம் செல்லும் சாலைகளில் வாகன போக்குரவத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!