திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியா..? செய்தியாளர்களின் கேள்விக்கு வைகோ கொடுத்த ரியாக்ஷன்!!
Author: Babu Lakshmanan26 January 2024, 1:00 pm
திருச்சியில் துரை வை.கோ போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருக்கா..? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு வைகோ பதிலளித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைவரும்,சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவனின் தலைமையில் நடைபெற உள்ள வெல்லும் சரணாக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த மதிமுக தலைவர் வைகோவை கட்சியினர் உற்சாகமாக வரவேற்றினர்.
அதை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது :- இந்திய நாட்டின் அரசியலில் நெருக்கடி காலத்துக்கு பின்னர் மாபெரும் மாற்றமும் திருப்பம் ஏற்படக்கூடிய சூழலில் நாடாளுமன்றத் தேர்தலை இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தியா சந்திக்க போகிறது.
இந்தியா என்று சொல்லும் பொழுது அந்த இந்தியா என்ற அமைப்பு கொள்ளும் பங்கெடுத்துக் கொண்டு இருக்கறிய கட்சிகள் எல்லாம் ஒற்றுமையாக இருந்து அனைத்து இடங்களிலும் பணத்தின் பலத்தாலும், அதிகார பலத்தாலும், தவறான பிரச்சாரத்தின், பலத்திலும் கோவிலை காட்டி மக்களை மயக்கி விடலாம் என்கின்ற அந்த உணர்வோடும் இங்கே நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் வரவேண்டும் என அவர்கள் முயற்சித்து வருகின்றனர். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.
இந்திய கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் தமிழகம் பாண்டிச்சேரி சேர்த்து 40 தொகுதிகளும் வெற்றி பெறுவதோடு மற்ற மாநிலங்களிலும் அப்படி வெற்றி பெறுகிற போது நிச்சயமாக பிஜேபி அல்லாத ஒரு அரசு அமையும். அது கூட்டாட்சி தத்துவத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுகின்ற அரசாக இருக்கும், எனக் கூறினார்.
கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை அமைக்கப்படும் என கவர்னர் பேசியுள்ளார் என்ற கேள்விக்கு, “இதனை ரொம்ப நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட் அதை ஏற்றுக் கொள்ளாது. அது சொல்வது பொதுமக்களை ஏமாற்றுவதற்காக, 30 கட்சிகள் ஒரு இடத்தில் இருக்கும் பொழுது சின்ன சின்ன பிணக்குகள் கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும் அது சரியா போய்விடும், எனக் கூறினார்.
திருச்சியில் சின்னவர் (துரை வை.கோ) போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருக்கா..? என்ற கேள்விக்கு, “எனக்கு தெரியாது,” என பதில் அளித்தார்.