திமுகவுக்கு எதிராக வைகோ சொன்ன வார்த்தை… திடீர் ட்விஸ்ட் : செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2023, 9:36 pm

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறும் போது, சேது சமுத்திர திட்டம் என்பது இந்த நாட்டுக்கு தேவையான திட்டம்.

அறிஞர் அண்ணா இதற்காக குரல் கொடுத்தார். அதற்காக நான் நடைபயணம் மேற்கொண்டேன். நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பேசி உள்ளேன்.

தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் தென் மாவட்டத்தில் உள்ள பொருளாதாரத்தையும் உயர்த்தும், தூத்துக்குடி துறைமுகத்திற்கு துணை திட்டமாக அமையும்.

இந்த திட்டத்தின் மூலமாக பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்தினால் தூத்துக்குடி துறைமுகம் பயன்பெறும் என்பதற்காக இந்த திட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவிக்கும் கருத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஒரு நாளைக்கு ஒரு நாள் முரண்பாடாக பேசி வருகிறார்.

பணத்தை விதைக்கிறது பிஜேபி தான். பணத்தை விதைத்து ஒவ்வொரு பிஜேபி ஒவ்வொரு பகுதியிலும் கொடியேற்றி வருகிறார்கள். பணத்தை விதைத்து தமிழகத்தை கையகப்படுத்தலாம் என நினைத்து வருகிறார்கள்.

திமுக கொடுத்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. என்னை பொருத்தவரை மதுவிலக்கில் உறுதியாக இருக்கிறேன். தமிழகத்தில் மதுவை ஒழிக்கப்பட வேண்டும் என்பது நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.
ஆகவே தான் எங்கள் கிராமத்தில் மது கடைகளை கூட அடித்து உடைத்து நீதிமன்ற வரை சென்று தீர்வு பெற்றேன். நான் மதுவுக்கு எதிரானவர். தமிழகத்தில் மது இல்லாத தமிழமாக திகழ வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும்.

சீமை கருவளை மரங்களை அகற்ற வேண்டும் என்று நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது நீதிபதி செல்வம் சீமை கருவேலை மரங்களை அகற்றுவதற்கு உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதி மன்றத்திலும் இது தொடர்பாக வாதாடி தமிழகத்தில் சீமை சீமை கருவேலை மரங்களை அகற்ற வேண்டும் என்று முயற்சியில் ஈடுபட்டேன். இதை கர்வமாக சொல்லவில்லை நான் பெருமைப்படுகிறேன். கருவேல மரத்தை அழிக்கவில்லை என்றால் விவசாயம் அழிந்து போய்விடும்.

மத்திய அரசு தமிழக உணர்வுகளுக்கு எதிரான அரசு தமிழருக்கு விரோதமான அரசு ஈழ தமிழர்களுக்கு விரதமன அரசு தமிழ்நாட்டு தமிழர்களுக்கு விரோதமான அரசு தமிழுக்கு விரோதமான அரசு இந்த அரசு தமிழருக்கும் தமிழ் நாட்டிற்கும் தமிழினத்திற்கும் எதிரான மத்திய அரசு ஆகவே இந்துத்துவாவை இணைக்க முயற்சி செய்கிறார்கள் மத்தியில் இருக்கின்ற அரசு தமிழர்களின் விரோதமான அரசாக உள்ளார்கள்.

இதை நான் உறுதியாக சொல்கிறேன். தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சி மக்கள் விரோத போக்கை நடத்திக் கொண்டிருக்கிறது தமிழக மக்களுக்கும் தமிழக இனத்திற்கும் விரோதமாக செயல்பட்டு வருகிறது. தமிழையும் தமிழ்நாட்டையும் அழிக்கும் பாக்கிறது எனவும் அவர் குற்ற சாட்டினார் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 388

    0

    0