சென்னை : 4 ஆண்டு கால தாமதத்திற்கு பிறகு வைரமுத்து சொத்து வரியை செலுத்தியதால் சீல் வைக்கும் முடிவை அதிகாரிகள் கைவிட்டனர்.
சொத்துவரி என்பது நில உரிமையாளர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என உள்ளூர் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய தொகையாகும்.
ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு சொத்துக்கள் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் புதியதாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அனைவரிடமும் சொத்து வரியை வசூலிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை பல முக்கிய புள்ளிகள், அரசியல் பிரமுகர்கள் முறையாக செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதனால் யாராக இருந்தாலும் சொத்துவரியை முறையாக செலுத்த வேண்டும் இல்லையென்றால் அவர்கள் சொத்துக்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்தது.
இந்த நிலையில் 4 ஆண்டுகளாக செலுத்தாமல் இருந்த சொத்து வரியை கவிஞர் வைரமுத்து செலுத்தியுள்ளார். சென்னை கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரத்தில் வைரமுத்துக்கு சொந்தமான திருமண மண்டபமான பொன்மணி மாளிகை இயங்கி வருகிறது
27 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள அந்த மண்டபத்திற்கு வைரமுத்து கடந்த 4 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தவில்லை. கிட்டத்தட்ட 8 லட்சம் ரூபாய் வரை சொத்து வரி நிலுவையில் இருந்த நிலையில் பலமுறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டும் வைரமுத்து காலம் தாழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை அதிகாரிகள் அத்திருமண மண்டபத்திற்கு சீல் வைக்க வந்தனர். இதுவரை 7 லட்சத்து 93 ஆயிரத்து 241 ரூபாய் சொத்து வரி செலத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தகவல் வைரமுத்துவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தொகையை மதியத்திற்குள் செலத்தி விடுவதாக திருமண மண்டபத்தில் உள்ள மேனேஜர் கூறினார்.
இதையடுத்து அந்த தொகை வைரமுத்து தரப்பில் இருந்து செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சீல் வைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட்டனர்.
கடந்த 4 ஆண்டு காலமாக வைரமுத்து சொத்து வரி கட்டுவதை தவிர்த்து வந்தது தற்போது தான் தெரியவந்ததுள்ளது. இதைவைத்து பலரும் வைரமுத்துவை விமர்சித்து வருகின்றனர்.
நேற்று வெளியான தமிழ் திரைப்படம் பெருசு. வைபவ், சுனில் ரெட்டி, பால சரவணன், சாந்தினி, தீபா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்…
மாதவனின் மனைவியாக நடிக்கும் நயன்தாரா ஓய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் குவாட்டர் கட்டிங்,இறுதிச்சுற்று,விக்ரம் வேதா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை…
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினி என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது திவ்யவதர்ஷினி என்கிற டிடி. இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சினிமாவிலும்…
விஜயுடன் திரையுலக அனுபவங்களை பகிர்ந்த நடிகை ரம்பா 1990-களில் முன்னணி நடிகையாக விளங்கிய ரம்பா,தனது அழகாலும் நடிப்புத் திறமையாலும் ரசிகர்களை…
திருச்சி, பாஜக மாவட்ட அலுவலகத்தில் டாஸ்மாக் துறையில் நடந்த ஊழல் குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு…
This website uses cookies.