‘இனி இந்தி தேசிய மொழி என யாரும் கூறாதீர்கள்’: கவிஞர் வைரமுத்து பேச்சு..!!

Author: Rajesh
29 April 2022, 7:04 pm

வேலூர்: இந்தி தேசிய மொழி என்ற கருத்தை இனி யாரும் பேசாதீர்கள் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி VIT பல்கலைகழகத்தில் இன்று தமிழியக்கம் சார்பாக புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 132-வது பிறந்த நாள் விழா இனிதே நடைபெற்றது.

சுமார் 1000க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்க்கு தமிழியக்கத்தின் பொருளாளர் “பதுமனார்”, பொதுச் செயலாளர் அப்துல்காதர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்க்கு VIT வேந்தர் மற்றும் தமிழியக்கத்தின் தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். கவிஞர் வைரமுத்து சிறப்புரை வழங்கி பேசும் பொழுது பாரதிதாசன் கருத்துப்படி வேந்தர் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, கல்வியை மேம்படுத்தி வருகிறார்.

இன்று 36,000 மாணவர்கள் ஒரு குடையின் கீழ் இருந்து 54 நாட்டிலிருந்து மாணவர்கள் இங்கு கல்வி வெளிச்சம் பெற்று வருகின்றனர். மக்கள் அனைவரும் சாதிக்கு பெருமிதம் கொள்ளாமல், தமிழன் என்று பெருமிதம் கொள்வோம் என்று உறுதிமொழி எடுங்கள்.


வடநாட்டு கலைஞர்கள் இந்தி தான் தேசிய மொழி என்று கூறுகிறார்கள். இந்தியா பல மொழிகள் பேசபடுகின்ற நாடு, எனவே இந்தி தேசிய மொழி என்ற கருத்தை இனி யாரும் சொல்லாதீர்கள் என்று கூறிய அவர் தமிழர்கள் அனைவரும் தமது பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள். அது நாம் பாரதிதாசனுக்கு செலுத்தும் நன்றி ஆகும் என்று கூறினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!