ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியாகும் வலிமை : அதிமுகவுக்கும் அஜித்துக்கும் என்ன தொடர்பு? அம்மாவின் உதவியாளர் ஓபன் டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 பிப்ரவரி 2022, 6:30 மணி
Admk Ajith - Updatenews360
Quick Share

பல நாள் காத்திருப்புக்கு பிறகு அஜித் ரசிகர்களுக்கு நாளை வெளியாகும் வலிமை திரைப்படம் நிச்சயம் திருவிழாதான். கிட்டத்தட்ட நேர்கொண்ட பார்வை ரிலீசாகி இரண்டு வருடங்கள் நெருங்குகிறது.

அஜீத்.. அதிமுக.. அம்மா அழைப்பு..' இந்த ரணகளத்திலும் இப்படி ஒரு குதூகலம்  கேக்குதா ரசிகாஸ்? | Ajith, ADMK and Ajith fans - Tamil Filmibeat

இரண்டு வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித் நடிக்கும் வலிமை பட நாளை ரிலீசாக உள்ளது. பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம், கொரோனா முன்னெச்சரிக்கையால் தியேட்டரில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் வலிமை ரிலீஸ் தள்ளிப்போனது.

Ajith Kumar's 'Valimai': Watch First Trailer for Indian Blockbuster -  Variety

இந்த நிலையில் பிப்.24 வெளியாகும் என படக்குழு அறிவித்தது. நாளை பிப்ரவரி 24. இந்த நாளில் முக்கிய அம்சங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக நாளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள், மற்றொன்று மாயக் கண்ணன் பிறந்த அஷ்டமி தினத்தில் வலிமை வெளியாக உள்ளது கூடுதல் சிறப்பு.

ஓ.பி.எஸ் மனைவிக்காக தேடியது முருகன் திருவடிகளில்.. அர்த்தம் புரியாத ஜெயலலிதா  உதவியாளர் பூங்குன்றன்..! | jayalalitha assistant poongundran sankaralingam  Facebook post

இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வலிமை திரைப்படம் ஜெ பிறந்தநாளில் வெளியாவது குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அதில் வலிமை படத்தின் முதல் பாடலாக வெளியான நான் பார்த்த முதல் முகம் நீ என்ற தாயை பற்றிய பாடல் ஜெயலலிதாவின் நினைவு தினமான டிசம்பர் 5ம் தேதி வெளியானது.படமும் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் வெளியாகிறது.

Sridevi's wish list had producing a Tamil film with Thala Ajith, says  husband Boney Kapoor - Movies News

அம்மாவின் கம்பீரம் படத்தின் பெயரில் உள்ளது. படத்தில் வரும் காட்சிகள், வசனங்கள் பார்த்துதான் அவர் அரசியலுக்கு வருவாரா இல்லை நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினத்தில் அஞ்சலி செலத்த படம் வெளியிடப்படுகிறதா என்பதற்கு படம் வந்த பிறகே விடை கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 1698

    1

    0