மளிகை பொருள் வாங்கினால் வலிமை பட டிக்கெட் இலவசம் : அதிரடி ஆஃபர் வெளியிட்ட கூட்டுறவு அங்காடி!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 February 2022, 5:05 pm

வேலூர் : 2999-க்கு மேல் மளிகை பொருள் வாங்கினால் அஜித்குமாரின் வலிமை படத்துக்கான 500 ரூபாய் மதிப்பிலான டிக்கெட், பாப்கார்ன் இலவசம் என அறித்துள்ளது தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி மையம்.

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட காகிதபட்டறை பகுதியில் செயல்பட்டு வருகிறது SIMCO எனும் மத்திய அரசின் தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு பல்பொருள் அங்காடி.

இதில் வாடிக்கையாளர்களின் காவனத்தை ஈர்க்கும் வகையில் இப்பல்பொருள் அங்காடியில் பொருள் வாங்குவோருக்கு அஜித்குமார் நடிப்பில் உருவாகி நாளை ரிலீசாகும் வலிமை படத்துக்கான டிக்கெட் இலவசம் என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் 2999- ரூபாய்க்கு மேல் மளிகை பொருள் வாங்குவோருக்கு காட்பாடி சில்க் மில்லில் உள்ள தனியார் (PVR) திரையரங்கில் வெளியாகும் வலிமை படத்துக்கான இலவச டிக்கெட் மற்றும் பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் அடங்கிய 500 ரூபாய் தொகுப்பு இலவச என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!