அரசுப் பள்ளியில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை ; தலைமையாசிரியர் கைது… வழக்குப்பதிவு செய்து விசாரணை!
Author: Babu Lakshmanan21 March 2024, 7:58 pm
கோவை : வால்பாறை அடுத்துள்ள காடம்பாறை பகுதியில் அரசு பள்ளியில் பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயற்சி செய்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி அடுத்துள்ள அங்கலகுறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் குலசேகரன் (50). இவர் வால்பாறை பகுதி காடம்பாறையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் தற்காலிக ஊழியராக 29 வயது பெண் வேலை பணி செய்து வந்துள்ளார்.
இந்த பெண் ஊழியரிடம் தலைமை ஆசிரியர் குலசேகரன் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தனது தாயாரிடம் தெரிவித்து, காடம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காடம்பாறை காவல் நிலைய போலீசார் தலைமை ஆசிரியர் குலசேகரனை விசாரணை மேற்கொண்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பொள்ளாச்சி கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.