வால்பாறையில் தொடர்ந்து பெய்யும் கனமழை : 3வது முறையாக சோலையார் அணை திறப்பு

Author: Babu Lakshmanan
5 August 2022, 11:12 am

வால்பாறையில் கனமழை காரணமாக மூன்றாவது முறையாக சோலையார் அணை திறக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகின்ற காரணத்தினால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோலையார் அணை 165 கன அடி கொள்ளளவை எட்டிய நிலையில், மூன்று மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் சுமார் 10.850 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால், கரையோரத்தில் உள்ளவர்கள் மிகவும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க முகாம் அமைக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் 122 மில்லி மீட்டர், மேல்நீராறு 142 மில்லி மீட்டர், கீழ்நீராறு 95 மில்லி மீட்டர், சோலையார் 85 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இதன் உபரி நீர் பரம்பிக்குளம் ஆழியார் பகுதிக்கு சுமார் 6000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்தக் காட்சியை காண்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அங்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…