எளிய நிலையில் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு தேடி வரும் : பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு குறித்து வானம்பாடி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் நெகிழ்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2022, 2:39 pm

கோவை : சாதாரண குடும்பத்தில் தனக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவித்ததது மகிழ்ச்சி அளிக்கிறது என பொள்ளாச்சியைச் சேர்ந்த வானம்பாடி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழ் இலக்கியவாதி, கவிஞர் தமிழகத்தின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்றவருமான சிற்பி பாலசுப்ரமணியம்
கோவை மாவட்டம், ஆத்துப் பொள்ளாச்சி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1936 ஆம் ஆண்டு பிறந்தார்.

கி.ஆ.பெ.விசுவநாதன், மா.பொ.சி. உள்ளிட்டோரின் சொற்பொழிவுகளைக் கேட்டதாலும் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளைப் படித்ததாலும் தமிழ் மீது ஆர்வம் பிறந்தது. 1987-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

தமிழ், ஆங்கிலம், மலையாளம், ரஷ்ய மொழிகளை நன்கு அறிந்திருந்தார். 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அப்போது முதல் கவிதை எழுதினார். நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து கவிதையை எழுதினார்.

மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்காகவும் இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்றார். மேலும் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றத்தின் தலைவராகவும், ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு மன்றத் தலைவராகவும் செயலாற்றிய சிற்பி பாலசுப்ரமணியம் இப்போது பத்மஸ்ரீ விருதையும் பெற்று பொள்ளாச்சி நகருக்கு பெருமை சேர்த்துள்ளார்.


பொள்ளாச்சியில் விருதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசும்போது இலக்கியம் கல்வி ஆகிய துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக மத்திய அரசு பத்மஸ்ரீ விருதிற்கு அறிவிக்கப்பட்டுள்ள ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இத்துறையில் பணியாற்றி வருகிறேன்.

விருது பெற தகுதியை ஏற்படுத்திய ஊக்கம் கொடுத்த குடும்பத்தினருக்கும் இலக்கியவாதிகளுக்கும் நன்றி உரித்தாக்குகிறேன். சாதாரண கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து சிறிய நகரத்தில் வளர்ந்து பணியாற்றிய தனக்கு விருது தேடி வந்துள்ளது எளிய நிலையில் இருந்தாலும் வாய்ப்புகள் தேடிவரும் என்று கூறினார்

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…