போராட்டம் நடத்த கூட நீதிமன்றத்திற்கு போக வேண்டிய நிலைமை.. திமுக அரசு மீது வானதி விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2025, 1:48 pm

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை மக்கள் சேவை மையம் தனியார் கல்லூரி சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

அரசை விமர்சனம் செய்தால் பத்திரிகையாளர்கள் மீது குண்டாஸ்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன்,நான் இரண்டு மூன்று விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன்,ஒன்று தமிழக காவல்துறை, ஒரு சிறு சிறு பதிவுகள் சமூக ஊடகங்களில் வந்தாலே பாய்ந்து போய் இரவோடு,இரவாக கைது செய்வது என்பது இன்றல்ல தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது.

இதில் கடந்த இரண்டு வருடங்களாக பா.ஜ.க வினர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.இரண்டாவது, எதிர்க் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல பத்திரிகையாளர்கள் கூட அரசாங்கத்தை விமர்சனம் செய்தால் குண்டாஸ் போடும் அளவுக்கு இந்த அரசு இருக்கிறது.

இதையும் படியுங்க: ஈரோடு இடைத்தேர்தலில் ‘சர்கார்’ பட சம்பவம்… பெண்ணின் வாக்கை செலுத்தியது யார்?

பா.ஜ.க வையும் தான் விமர்சிக்கிறார்கள் மோடியை விமர்சிக்காத ஊடகங்களை கிடையாது. ஆனால் தமிழக அரசை பற்றி விமர்சித்தால் பத்திரிக்கையாளர்கள் கூட தப்புவதில்லை. அதே போல அண்ணா பல்கலைக் கழக மாணவி விஷயத்தில், அத்தனை எதிர்க் கட்சிகளும் போராடுவதற்கு அனுமதி கேட்ட பொழுது அவர்கள் அனைவரையும் கைது செய்து மிக மோசமான ஒரு இடத்தில் அடைத்து வைத்தார்கள்.

போராட்டம் நடத்த கூட நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலைமை

அதே போலத் தான் திருப்பரங்குன்றம் விஷயத்தில் நீதிமன்றம் சென்று ஆணை பெற்று ஒரு போராட்டம் நடத்தக் கூடிய சூழலில் தான் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கிறது. ஒருபுறம் அன்றாடம் கொலை கொள்ளை, அதே போல தி.மு.க வை சேர்ந்தவர்கள் எவ்வளவு கிரிமினல் வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை தினம்தோறும் செய்திகளில் பார்க்கிறோம்.

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு என்பது முழுவதுமாக சீர் கெட்டு இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை பார்க்கிறோம்.அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிற உரிமைகளுக்கு கூட நீதிமன்றம் சென்று தான் அதனை அமல்படுத்த முடியும் என்கின்ற சூழலில், இன்று எதிர்கட்சிகள் இருக்கிறார்கள்.

BJP mla

அப்படி இருக்கும் பொழுது இது சட்டத்தின் ஆட்சி நடக்கிற மாநிலமா ?, திராவிட மாடல் அரசு என்பது எல்லோருக்குமான அரசு என்று பெருமை பேசிக்கொள்ளும் தி.மு.க அரசு, எதிர்க் கட்சிகளுடைய ஜனநாயக உரிமையை நசுக்க பார்க்கிறது.டெல்லி தேர்தல், முடிவுகளை உற்சாகத்தோடு எதிர்நோக்கி காத்து இருக்கிறோம்.

இம்முறை டெல்லியிலே மிகப்பெரிய மாற்றத்திற்கு மக்கள் தயாராகி இருக்கிறார்கள் என்பதை பிரச்சாரத்தின் போது எங்களால் உணர முடிந்தது. நல்ல ஒரு தீர்ப்பை இன்று அவர்கள் எழுத துவங்கி இருக்கிறார்கள்.

ஈரோட்டில் மக்களை பட்டியில் அடைச்சு வெக்கறாங்க

ஈரோடு கிழக்கு தேர்தலில் அத்தனை எதிர்க்கட்சிகளும் புறக்கணித்தும் நான் மட்டுமே சாம்பியன் என்று களத்தில் ஒற்றை ஆளாய் நின்று கொண்டு இருக்கிற தி.மு.க விற்கு ஈரோடு மக்கள் என்ன மதிப்பு அளிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

போட்டி போட ஆளே இல்லாத சமயத்திலும் மக்களை அடைத்து வைப்பது பண பட்டுவாடா என அவர்களுடைய வேலைகளை பக்காவாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு தமிழகத்தின் எதிர்க்கட்சியை சேர்ந்த மாநில தலைவர் ஒரு கிரிமினல் குற்றத்திற்கான எவிடன்ஸை, அவருக்கு கிடைக்க கூடிய ஆதாரங்களை வெளியிடுகிறார் என்றால் அது தமிழக அரசுக்கு மிகப்பெரிய அவமானம், தலைகுனிவு என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், வளர்ச்சியையும், சுற்றுப்புற சூழலையும் நாம் பேலன்ஸ் செய்தாக வேண்டும். அறிவியல் தொழில் நுட்பம் நமக்கு கிடைக்க பெறும் பொழுது அதனுடைய வசதிகளை சமுதாயம் விளக்க முடியாது, அதேசமயம் நாம் பயன்படுத்தக் கூடிய பொருட்கள், செயல்கள் மூலமாக மரங்களை எப்படி காப்பாற்றுவது, நடுவது, எப்படி மாற்று வழிகளை யோசிப்பது போன்றவைகளில் தான் இன்னைக்கு இருக்கக் கூடிய இந்த கார்பன் நேச்சுரல் நாம் எவையை நோக்கி செல்லும் போது சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்க முடியும்.

Vanathi

வளர்ச்சியிலும் பின்தங்கிக் கொள்ளாமல் இருக்க முடியும். அரசாங்கம் இதற்கான மிகப்பெரிய முன்னெடுப்பை எடுக்க வேண்டும். அப்பொழுது மட்டும் தான் இது நடக்கும்.

கோவை மெட்ரோ தொடர்பாக சட்டப் பேரவையில் முதல் நாள் ஆரம்பத்தில் இருந்து, நான் தொடர்ச்சியாக பேசிக் கொண்டு தான் இருக்கிறேன்.அதற்கான பணிகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.மத்திய அரசின் தரப்பில் இருந்து என்னெல்லாம் உதவி மாநில அரசுக்கு வேண்டுமோ ? அதைப் பெற்றுத் தருவதில் நாங்கள் முன்னாள் இருப்போம்.

Vanathi Srinivasan Criticized DMK Government

நேரம் கிடைத்தால் நாளை விடாமுயற்சி திரைப்படத்தை நிச்சயம் சென்று பார்த்து விடுகிறேன்.ஒரு கட்சி ஆரம்பித்தவுடன் அதன் அறிவிப்பிலேயே இவ்வளவு குளறுபடிகள் இருக்கிறது என்றால் ஒரு அரசியல் இயக்கம் எப்படி ? அடுத்த பரிமாணத்திற்கு செல்லும் என்பது ஒரு சந்தேகமாக இருக்கிறது என தெரிவித்தார்.

  • DD Neelakandan viral video ஸ்காட்லாந்தில் ‘காதல்’ நாயகன்…டிடி வெளியிட்ட ரொமான்டிக் வீடியோ…குவியும் வாழ்த்து.!
  • Leave a Reply