விழுப்புரம் ; விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது வன்னியர் சங்கம் அவதூறு வழக்கு தொடுத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல் பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோவில் விழாவின் போது அப்பகுதியை சேர்ந்த இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதன் காரணமாக அரசு அதிகாரிகள் கோவிலுக்கு சீல் வைத்தும் காவல்துறை பாதுகாப்பு வழங்கியும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனிடையே, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், மேல்பாதி கிராமத்தில் நடந்த கலவரம் தொடர்பாக விமர்சனம் செய்துள்ளார்.
அதில், ஒட்டுமொத்த வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் mbc, மற்றும் obc பிரிவை சேர்ந்த மக்களையும் பொதுமேடையில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மேலும், அப்பகுதி மக்களிடையே வன்முறையை தூண்டிவிடும் வகையில் பொதுவெளியில் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சமூக நீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலுவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இரு தரப்பு மக்களிடையே மோதலை உருவாக்கும் விதத்திலும் அமைதியை சீர்குலைத்து சுயலாபம் தேடி வரும் திருமாவளவனுக்கு வன்னியர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதனிடையே, வன்னியர் சங்க மாநில செயலாளர் மு. கார்த்தி சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் நான்கில் திருமாவளவன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் பேசிய வீடியோ ஆதாரங்களையும், நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அவரவர் குல தெய்வங்களை கோவிலுக்கு சென்று அமைதியான முறையில் வழிபட முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை கண்காணித்து அரசு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன் காவல்துறையினர் இருபத்தி நான்கு மணிநேரம் அமைதியாக இருந்தால் கோவில் பிரச்சனைக்கு நாங்களே தீர்வு காண்போம் என்று மிரட்டியதையும், தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்தில் எடுத்துக் கொண்டு இனிவரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்
வழக்குரைஞர்கள் ஐயப்பமணி, பகத்சிங், கண்ணன், குமார், விஜயராசா ஆகியோர் இந்த வழக்கினை தொடர்ந்துள்ளனர்.
பாமக வடக்கு மாவட்ட செயலாளர் நாராயணன், மாணவர் மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சிவசங்கரன், வடக்கு மாவட்ட தலைவர் சிவராமன், அமைப்பு செயலாளர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.