சொந்த நிலத்தில் மரம் வெட்ட ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட விஏஓ : மாறுவேடத்தில் வந்த போலீஸ்.. காத்திருந்த ட்விஸ்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2023, 6:38 pm

குமரி மாவட்டம் கடையல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பத்துகாணி பகுதியை சார்ந்த பிரேன் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட களியல் கிராம நிர்வாக அலுவலகத்தில் வந்து அனுமதி கோரியுள்ளார்.

முதலில் கிராம நிர்வாக அலுவலர் அனுமதி வழங்க இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மரத்தை வெட்ட அனுமதி அளிக்க 3000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பிரேன் குமரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி விக்டர் தர்மராஜ் தலைமையிலான அதிகாரிகளின் ஆலோசனைப்படி இன்று பிரேன் கிராம நிர்வாக அலுவலகத்தில் வந்து கிராம நிர்வாக அலுவலரிடம் 2000 ரூபாய் அளித்துள்ளார்.

அதே நேரத்தில் அவருடன் மாறு வேடத்தில் வந்த லஞ்சு ஒழிப்புத்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர் முத்து என்பவரை கையும் களவுமாக பிடித்தனர்.

இவர் பல வருடங்களாக களியல் கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 377

    0

    0