வாரிசு சான்றிதழ் வேணுமா? ரூ.2000 எடு : ஆர்டர் போட்ட விஏஓ… காட்டிக் கொடுத்த வீடியோ!!!
திண்டுக்கல் அருகே உள்ள அடியனூத்து கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜ். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து இவரது மனைவி அன்னலட்சுமி.
இவர் தனது பெயரில் வாரிசு சான்றிதழ் வழங்கக்கோரி கடந்த 27 .7 .2023 இணையதளம் மூலம் அடியனூத்து கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு செய்தார்.
ஆனால் அவருக்கு வாரிசு சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அன்ன லட்சுமி தனது பேரன் கோபி நாகராஜ் மூலம் அடியனூத்து கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தத்தை பலமுறை நேரில் சந்தித்து தனக்கு வாரிசு சான்றிதழ் வழங்க கோரி வலியுறுத்தியுள்ளார்.
இதனை அடுத்து வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு 2000 ரூபாய் லஞ்சம் தருமாறு கோபி நாகராஜிடம் கிராம நிர்வாக அலுவலர் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபி நாகராஜ் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைப்படி கோபிநாத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை, கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த டி.எஸ்.பி சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், உதவியாளர் செந்தில்குமார் ஆகியோரை மடக்கிப்பிடித்தனர்.
தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.