துண்டு துண்டா வெட்டி வீசிடுவேன்… கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் : போனை எடுத்து பேசிய மனைவிக்கு அதிர்ச்சி!

Author: Babu Lakshmanan
30 January 2023, 11:39 am

உசிலம்பட்டி அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு வட்டாச்சியர் அலுவலக உதவியாளர் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகவும், வட்டாச்சியரின் கார் ஒட்டுநராகவும் பணியாற்றி வருபவர் நவநீதன். இவர் பட்டா மாறுதலுக்கான வட்டாச்சியர் அலுவலகத்திற்கு வரும் நபர்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டு, நான் வாங்கி தருகிறேன் என இடைத்தரகர் பணியையும் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பட்டா மாறுதலுக்காக கொடுக்கப்பட்ட மனுவில் கையொப்பம் இட வலியுறுத்தி சீமானுத்து கிராம நிர்வாக அலுவலர் சுப்பையாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நவநீதன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராம நிர்வாக அலுவலரின் மனைவி தொலைபேசியில் பேசிய நிலையில், அவரிடம் விஏஓ -வை கொலை மிரட்டல் விடுத்து பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்ட போது கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் சிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா தெரிவித்துள்ளார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?