பிரமாண்டமாக தயாராகும் வாரிசு இசை வெளியீட்டு விழா ; எப்போது தெரியுமா…? குஷியான விஜய் ரசிகர்கள்… !!
Author: Babu Lakshmanan14 September 2022, 4:54 pm
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் ஒருவரான நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் வாரிசு. இந்தப் படத்தை இயக்குநர் வம்சி இயக்குகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரிசு பட சூட்டிங் காட்சிகளும் சமூகவலைதளங்களில் வெளியாகி மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அண்மையில் இப்படத்தின் இசையமைப்பாளர் தமன் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என்பதை சூசகமாக தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும், இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 4-ம் தேதி அல்லது 11-ம் தேதி நடைபெற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.