வாரிசு பட ரிலீசை முன்னிட்டு DJ பார்ட்டி : பட்டாசுகள் வெடித்து அதிகாலை 4 மணிக்கு உற்சாக கொண்டாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 January 2023, 9:13 am

கரூர் மாவட்டம் குளித்தலையில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாவதையொட்டி விஜய் ரசிகர்கள் டிஜே பார்ட்டியுடன், வானவேடிக்கை நிகழ்த்தி உற்சாக கொண்டாட்டம்.

தமிழகம் முழுவதும் இன்று அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரசு திரைப்படம் வெளியாகும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியிடப்பட்டது அதிகாலை 4 மணி சிறப்பு காட்சி

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள லட்சுமி திரையரங்கில் வாரிசு திரைப்படம் வெளியானது. இதனையடுத்து விஜய் ரசிகர் மன்றம் சார்பில் நள்ளிரவு 1 மணி முதல் டிஜே பார்ட்டியுடன் விஜய் பாடல்களுக்கு நடனம் ரசிகர்கள் ஆடியும், வாணவேடிக்கைகள், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினார்.

அதிகாலை 4 மணிக்கு முதல் சிறப்பு காட்சி திரையிட்டப்பட்ட நிலையில் ரசிகர்கள் அதிகாலை ஒரு மணி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தியேட்டரில் முன்பு குவிந்தனர்

பின்னர் 3.30 மணி அளவில் வரிசையாக நின்ற விஜய் ரசிகர்கள் திரையரங்கத்திற்குல் அனுமதிக்கப்பட்டு மேலும் முதல் சிறப்பு காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

கரூர் மாநகராட்சியில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் காலை 10:30 மணியளவில் வெளியாகிறது. அஜந்தா,அமுதா ஆகிய 2 திரையரங்குகளில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெளியாகிறது.

கலையரங்கம், திண்ணப்பா, எல்லோரா ஆகிய 3 திரையரங்குகளில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ