தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

Author: Selvan
3 March 2025, 8:07 pm

அரையிறுதியில் வருண் ஆடுவாரா

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளுகிறது.

இதையும் படியுங்க: அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

இரண்டு அணிகளும் செம பலம் வாய்ந்த அணிகள் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது,இந்திய அணியின் தற்போது பலமாக இருப்பது சுழற்பந்து வீச்சாளர்கள் தான்,ஆனால் அதுவே இப்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

Indian spin bowlers dilemma

ஆம் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது,தமிழக வீரர் வருண் சக்கவர்த்தி எப்படி செயல்படுகிறார் என்பதை டெஸ்ட் பண்ண ரோஹித் இந்த முடிவை எடுத்தார்.

ஆனால் அவர் நேற்று நடந்த போட்டியில் 5 விக்கெட்களை எடுத்து மிரட்டி விட்டார்,அதுமட்டுமில்லாமல் மற்ற சுழற்பந்துவீச்சாளரான குல்தீப்பும் கட்டுக்கோட்பாக பந்துவீசி விக்கெட் எடுத்தார்.

ஆல் ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் அக்ஷர் படேலும் அற்புதமாக பந்து வீசி நியூசிலாந்து வீரர்களை தங்களுடைய சுழலில் சுருட்டினார்கள்,இதனால் அரையிறுதி போட்டியில் எந்த சுழற்பந்து வீரரை உட்கார வைப்பது என்ற குழப்பத்தில் தற்போது இந்திய அணி உள்ளது.

அரையிறுதி போட்டி முக்கியமான போட்டி என்பதால் ஒரு வேகப்பந்துவீச்சாளருடன் இந்திய அணி செல்வது கடினம்,அதனால் நாளை நடைபெறும் போட்டியில் தமிழக வீரர் வருண் இடம்பெறுவாரா இல்லை வேகப்பந்து வீச்சாளர்களை நம்பி இந்திய அணி களமிறங்குமா என்பதை பொறுத்திருந்து பார்போம்

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ