ஆதி திராவிடர் வகுப்பினருக்கு கொடுத்த பட்டா நிலத்தை ஆக்கிரமித்த விசிக நிர்வாகிகள் : பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2023, 8:22 pm

மதுரை மாவட்டம் திருவாதவூர் ஊராட்சி டி.மாணிக்கம் பட்டியில் ஆதிதிராவிடர் பிரிவிவினர் 40 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

1999ஆம் ஆண்டு ஆதிராவிடர் நலப்பிரிவு சார்பாக நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. தற்போது,அந்த பட்டா நிலத்தை ஆதிதிராவிடர் உட்பிரிவு வகுப்பைச் சார்ந்தவர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த நபர்கள் ஒன்று சேர்ந்து எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் அத்துமீறி நுழைந்து அளவுகோல்களை அத்துமீறி சுத்தம் செய்து இடத்தை ஆக்கிரமித்து உள்ளனர்.

குறிப்பாக திருவாதவூரில் உள்ள ஆதிதிராவிடர் நபருக்கு மட்டுமே இந்த இடம் கொடுக்கப்பட்டது. எனவும் கட்சி ரீதியாக அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்ணங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் பூசி சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து ஊர் மக்கள் ஒன்று கூறி அவர்களிடம் கேட்டபோது இது எங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம் என மக்கள்களை மிரட்டி வருகின்றனர்.

எனவே அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட நிலத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கும்பலிடமிருந்து மீட்டு வழங்குமாறு திருவாதவூர் ஊராட்சி டி.மாணிக்கம் பட்டி பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!