திருமணத்திற்காக மின்சாரத்தை திருடிய விசிக நிர்வாகி : வாழ்த்திச் சென்ற அரசியல் கட்சி தலைவர்கள்!
Author: Udayachandran RadhaKrishnan21 October 2024, 4:17 pm
தனது திருமணத்திற்காக மின்சாரத்தை திருடிய விசிக நிர்வாகியின் செயல் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் உள்ள தனியார் திருமணமான மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி திருமணம் நடைபெற்றது.
அந்த திருமணத்திற்கு தொல் திருமாவளவன், காங்கிரஸ் கமிட்டி மாநில செல்வ பெருந்தகை, திமுக படப்பை மனோகரன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர்.
இந்த திருமணத்திற்கு, சாலையின் மத்தியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட டியூப் லைட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.
அதற்கு உண்டான மின்சாரம், உயர் மின்னழுத்த கம்பிலிருந்து திருடுபட்டது குறிப்பிடத்தக்கது.