‘கஷ்டப்படுத்தாதீங்க… நான் எம்எல்ஏ.. கிளர்க் மாதிரி நடத்தாதீங்க’ ; ஆய்வுக்கு சென்ற இடத்தில் விசிக எம்எல்ஏ காட்டம்!!

Author: Babu Lakshmanan
27 April 2024, 10:54 am

நான் ஒரு எம்எல்ஏ, கிளர்க் மாதிரி டீல் பண்ணாதீங்க என திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி காட்டமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் அவதிப்பட்டு வருவதாக அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்எஸ் பாலாஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க: வார இறுதியில் மீண்டும் உச்சம் பெற்ற தங்கம் விலை… நகை பிரியர்கள் அதிர்ச்சி..!!

அப்பொழுது, அவர் மருத்துவர்களின் வருகை பதிவேடு எடுத்து எந்த மாதிரியான நோயாளிகளை கையாளுவதற்கு இங்கு மருத்துவர்கள் இல்லை எனவும், நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளதா..? என கேட்டு அறிந்தார். பிறகு அதற்கான ஏற்பாடுகள் செய்து தருகிறேன் என கூறினார்.

நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் வைப்பதற்காக குளிர்சாதனப்பெட்டி (பிரிட்ஜ்) வேண்டுமென மருத்துவர்கள் கோரிக்கை வைத்ததை ஏற்று, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய குளிர்சாதன பெட்டியை மருத்துவமனைக்கு தனது சொந்த செலவில் வழங்கினார்.

மேலும் நோயாளிகள் இருக்கும் அறையை ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான மருத்துவத்தை தரமாக வழங்க வேண்டும் என மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மருத்துவமனையை விட்டு வெளியே வந்த போது திடீரென அவருக்கு செல்போனில் அழைப்பு வந்தது.

அதனை எடுத்து பேசிய போது, திடீரென காட்டமான அவர், “ஒரு சின்ன விஷயத்துக்கு ஒன்பது வாட்டியா போன் பண்ணுவீங்க… நான் ஒரு எம்எல்ஏ கிளர்க் மாதிரி டீல் பண்ணாதீங்க…” எனக் கூறினார். இது அங்கிருந்தவர்களை பரபரப்புக்கு உள்ளாக்கியது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி