கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

Author: Hariharasudhan
31 March 2025, 2:14 pm

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர்: கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டப் பொருளாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அதர்நத்தம் கிராமத்தில் உள்ள செல்வத்துக்குச் சொந்தமான நிலத்தில் போடப்பட்டிருந்த செட்டில் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். ஆனால், போலீசார் வரும் முன்கூட்டியே தெரிந்ததால் கள்ள நோட்டு அச்சடித்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியதாகச் சொல்லப்படுகிறது.

Fake Currency in Cuddalore

மேலும், போலீசாரின் சோதனையில், அங்கு 85,000 ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு, 4 வாக்கி டாக்கிகள், போலீஸ் சீருடைகள், பிரிண்டிங் மெஷின், கம்ப்யூட்டர், லேப்டாப், பிஸ்டல் ஏர் கன், ரிசர்வ் வங்கி போலி முத்திரை, பேப்பர் பண்டல்கள், பணம் எண்ணும் இயந்திரம், கார் மற்றும் கேசிபி உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

இதனிடையே, தப்பியோடி தலைமறைவான செல்வம் உள்ளிட்ட கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செல்வத்தை நீக்கி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

  • Enforcement Directorate raids famous actor's house.. Arrest soon?பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!