‘இந்தாங்க ஆதாரம்… நடிகர் விஜய்யை கைது செய்யுங்க’.. அப்போதான் பயம் வரும் : வீரலட்சுமி பரபரப்பு புகார்..!!

Author: Babu Lakshmanan
20 May 2024, 5:27 pm

கோகைன்’ போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடிகர் விஜய் , தனுஷ் , நடிகை திரிஷா , ஆண்ட்ரியா உள்ளிட்ட திரைப் பிரபலங்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி கைது செய்ய வேண்டுமென உள்துறை செயலாளர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் நடத்திய கேளிக்கை நிகழ்ச்சியில் போதைப் பொருளான ‘கோக்கைன் ‘ பரிமாறப்பட்டு அவற்றை தனுஷ் , த்ரிஷா , ஆண்ட்ரியா உள்ளிட்டோர் அருந்தியதாக பின்னணிப் பாடகி சுசித்ரா கூறிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி உள்துறை செயலாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

மேலும் படிக்க: ‘எங்கள கருணைக்கொலை பண்ணிடுங்க’…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வயது முதிர்ந்த தம்பதி தர்ணா!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் அலுவலக உதவியாளரிடம் புகாரளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோக்கைன் போதைப் பொருள் பயன்பாடு குறித்து சுசித்ரா கூறியுள்ள நிலையில், நடிகர்கள் விஜய், தனுஷ், நடிகைகள் திரிஷா, ஆண்ட்ரியா மற்றும் விஜய் ஏசுதாஸ், கார்த்திக் குமார் ஆகியோரிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு அவர்களை கைது செய்ய வேண்டும், என்று கூறினார்.

மேலும், சுசித்ராவின் முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார் பட்டியல் சமூகத்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விசாணை நடத்தி அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

  • Actor Vinayakan controversy போதையில் செய்த அடாவடி…என்னால சமாளிக்க முடியல…மன்னிப்பு கேட்ட விநாயகன்…!