தடையை மீறி ஊர்வலம்… வீரபாண்டிய கட்ட பொம்மன் பிறந்த நாள் விழாவில் அத்துமீறல் ; போலீசார் தடியடி நடத்தியதால் கரூரில் பதற்றம் !!

Author: Babu Lakshmanan
3 January 2023, 1:57 pm

கரூரில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் வீரபாண்டிய கட்ட பொம்மன் 264 வது பிறந்த நாள் விழாவில் போலீஸார் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்ட தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில் மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வில் கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு தேவராட்டமும், பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் திடீரென தடையை மீறி பைக்கில் ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், இருசக்கர வாகன ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என்றும், அவர்கள் மீது போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது.

மேலும் நிர்வாகிகளின் சட்டையை பிடித்தும், தள்ளுமுள்ளு நிகழ்ச்சியும் அரங்கேறியது. ஒரு சிலரது சட்டைகளையும் போலீஸார் கிழித்தது.

சுதந்திர போராட்ட வீரருக்கு அதுவும் அவரது பிறந்த நாளில் போலீஸ் லத்தி சார்ஜ் நிகழ்த்தியது தமிழக அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?