என் தந்தைக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல… பிரச்சாரத்தின் போது வீரப்பனின் மகள் உருக்கம்…!!!

Author: Babu Lakshmanan
9 April 2024, 7:33 pm

நான் வளர்ந்தது போல நல்ல சூழலில் எனது தந்தை வளர்ந்திருந்தால் அதுப்போன்ற வழிக்கு போயிருக்க வாய்ப்பில்லை என்று வீரப்பனின் மகள் உருக்கமாக பேசியுள்ளார்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிட்டுள்ளார். வட்டம் முழுவதும் மைக் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வரும்நிலையில், இன்று தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: எங்களை மீறி அதிகாரிகளால் செயல்பட முடியுமா…? தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேச்சால் பரபரப்பு

பின்னர் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடந்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், வித்யாராணி வீரப்பன் உறையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது :- எனது பெற்றோர் வளர்ப்பில் நான் வளரவில்லை. நல்ல சூழலில் நான் வளர்ந்ததால் நல்ல முறையில் வளர்ந்து நன்றாக படித்தேன்.. இதுப்போன்ற சூழல் எனது தந்தைக்கும் கிடைத்திருந்தால் அதுப்போன்ற வழிக்கு போயிருக்க வாய்ப்பிருந்திருக்காது. எனது தந்தை கிராமத்தில் எத்தனை பேர் சந்தனமரத்தை வெட்டி, தந்தங்களை கடத்தினார்கள். எனது தந்தை மட்டும் தான் செய்தாரா? வாங்கியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இன்று நீங்கள் மலையை உடைத்து விற்பதும் திருட்டு தானே? நாளை உங்கள் பிள்ளைகளும் நடுரோட்டில் தட்டேந்தி நிற்பார்கள், என பேசினார்.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…