பாஜகவில் இருந்து விலகிய வீரப்பனின் மகள்… கிருஷ்ணகிரியில் போட்டி : எந்த கட்சியில் இருந்து தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2024, 9:56 pm

பாஜகவில் இருந்து விலகிய வீரப்பனின் மகள்… கிருஷ்ணகிரியில் போட்டி : எந்த கட்சியில் இருந்து தெரியுமா?

சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். பாரதிய ஜனதாவில் தனக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என அவர் எதிர்பார்த்திருந்தார்.

எந்த பொறுப்பும் வழங்கப்படாததால் விரக்தியில் இருந்த வித்யா, மக்களவை தேர்தலை முன்னிட்டு மீண்டும் அவரது அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன.

கடந்த மாதம் அவர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேசிய நிலையில் அக்கட்சியில் இணைந்ததாக தெரிகிறது.

இப்படியான சூழலில் மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்த நிலையில் அதில் ஒருவராக வித்யா ராணியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ