ஐபிஎல் போட்டியின் போது வெளியாகும் தமிழ் படத்தின் டிரைலர்.. வெளியான தகவல்.!

Author: Rajesh
24 May 2022, 4:08 pm

இந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற திரைப்படம் பதாய் ஹோ.
வீட்டில் கல்யாண வயதில் மகளும் மகனும் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது.

முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்துக்கு பாக்யராஜ் படத்தின் தலைப்பான வீட்ல விஷேசங்க என்ற தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது. வீட்ல விஷேசம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜுன் 17 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் டிரைலர் நாளை நடக்கும் ஐபிஎல் போட்டியின் போது வெளியிடப்படும் என ஆர்.ஜே. பாலாஜி அறிவித்துள்ளார். முன்னதாக அவர் நடித்த டுமுபு மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களின் டிரைலரும் ஐபிஎல் போட்டியின் போதுதான் ரிலீஸ் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி