உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்லத் தொடரும் தடை : வனத்துறையினர் புதிய விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2022, 7:50 pm

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் மாலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்கும் வரை வழக்கமான நடைமுறையே தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து இலகு ரக வாகனங்கள், விவசாய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பால் மற்றும் மருத்துவ தேவைகள், உள்ளூர் பொதுமக்கள் பயணிக்க தடையில்லை என இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல வழக்கமான நடைமுறையே பின்பற்றப்படுகிறது. கனரக லாரிகள் வழக்கம்போல் மாலை 6.00 மணிக்கு மேல் பண்ணாரி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.

கார்கள், பேருந்து, மினி வேன்கள் கட்டணம் செலுத்தி, சென்று வருகிறது. தங்களுக்கு இதுவரை எந்த உத்தரவும் வராததால், வழக்கமான நடைமுறையே பின்பற்றப்படும் எனவும், இரவு 9.00 மணிக்கு மேல் எந்த வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது எனவும், அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படும் எனவும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த பின்னரே திம்பம் மலைப்பாதையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி வாகனங்கள் அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1620

    0

    0