‘அது சாத்தியமானால் தான் எங்களுக்கு மறுவாழ்வு’… NGO-க்களுக்கு அழைப்பு விடுக்கும் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்புக்குழு

Author: Babu Lakshmanan
25 January 2024, 8:22 pm

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை முழுமையாக முடிக்க, ஆதரவு தருமாறு தொண்டு நிறுவனங்களுக்கு வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளலூர்‌ என்ற பகுதியில்‌ மிகப்‌ பெரிய குப்பை கிடங்கு உள்ளது. இதில்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டத்தின்‌ அனைத்து பகுதிகளின்‌ குப்பைகளையும்‌ சுமார்‌ 25 ஆண்டுகளுக்கும்‌ மேலாக இங்கு தான்‌ சேகரிக்கப்படுகிறது. இது திறந்த வெளியில்‌ சேகரிக்கப்படும்‌ குப்பை கிடங்காகும்‌. இதனால்‌ மழை பொழியும்‌ காலங்களில்‌ குப்பைகளிலிருந்து வெளிவரும்‌ கழிவு நீர்‌ கசிவுகள்‌ அப்படியே நிலத்திற்குள்‌ சென்று நிலத்தடி நீரை சேதப்படுத்துவதோடு துர்நாற்றமும்‌ மிகுந்த அளவு ஏற்படுகிறது.

இதனால்‌ இப்பகுதிகளுக்கு அருகில்‌ இருக்கும்‌ பொதுமக்கள்‌ இந்த நிலத்தடி நீரை உபயோக்கப்படுத்தப்படும்‌ போது அவர்களுக்கு தோல்‌ சம்பந்தப்பட்ட வியாதிகள்‌, புற்றுநோய்‌ மற்றும்‌ பல்வேறு நோய்‌ தொற்றுகள்‌ ஏற்படுகிறது. மேலும்‌ இந்த குப்பை கிடங்கினால்‌ இதனை சுற்றியுள்ள பகுதிகளான செட்டிபாளையம்‌, போத்தனூர்‌, மதுக்கரை, சிங்காநல்லூரின்‌ ஒருபகுதி, வெள்ளலூர்‌, மலுமிச்சம்பட்டியின்‌ ஒருபகுதி, பெரியகுயிலி மற்றும்‌ இதர பகுதிகளும்‌ இந்த குப்பை கிடங்கினால்‌ பெரிதும்‌ பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில்‌ நகரமான கோயம்புத்தூர்‌ மிகுந்த வளாச்சியடைந்த போதிலும்.‌ இந்த குப்பைகிடங்கை இவர்கள்‌ முறையாக நடைமுறைப்படுத்தாததால்.‌ இந்த பகுதிகளில்‌ மிகுந்த அளவு துற்நாற்றம்‌ வீசுகிறது. இதனாலே இந்த பகுதி ஒரு சபிக்கப்பட்ட பகுதியாகவே உள்ளது. இந்த பகுதிகளில்‌ மட்டும்‌ எந்தவொரு வளர்ச்சி பணிகளும்‌
நடைபெறாமலே உள்ளது. இந்த பகுதி மக்களுக்கு ஏதாவது ஒரு வளாச்சி செய்ய வேண்டும்‌ என்ற நோக்கத்தில்‌ வெள்ளலூர்‌ பகுதி மக்களுக்காக போராடி இந்த பகுதியில்‌ பேருந்து நிலையம்‌ அமைத்து தர வேண்டும்‌ என போராடினோம்‌.

இந்த மிகப்‌ பெரிய போராடத்திற்கு பிறகு கடந்த அ.தி.மு.க ஆட்சியில்‌ இங்கு ரூ.165 கோடி மதிப்பிட்டில்‌ பேருந்து நிலையம்‌ அமைக்க ஒப்புதல்‌ வழங்கியது. பேருந்து நிலையம்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று பேருந்து நிலையத்தின்‌ அனைத்து கட்டுமான பணிகளும்‌ முடிக்கப்பட்டது. தற்போது அதன்‌ உட்பக்க கட்டமைப்பு பணிகள்‌ மட்டும்‌ மீதம்‌ உள்ள நிலையில்‌ உள்ளது.

இந்த உட்பக்க கட்டமைப்பு பணிகள்‌ மட்டும்‌ முடித்தாலே பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும்‌. சுமார் ரூ.100 கோடி ரூபாய்‌ வரை பேருந்து நிலையத்திற்காக மக்கள்‌ வரி பணத்தை செலவு செய்தும்‌ எந்த பயனும்‌ இல்லை. இந்த சமயத்தில்‌ ஜி-ஸ்கொயர் என்ற நிறுவனம்‌ L&T பைபாஸ்‌ சாலையில்‌ சுமார்‌ 300 ஏக்கர் பரப்பளவில்‌ வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகிறது. இதற்கு முக்கிய விளம்பர ஆதாரமாக இந்த பகுதிக்கு அருகில்‌ தான்‌ புதிய பேருந்து நிலையம்‌ அமையப்போகிறது என்று விளம்பரம்‌ செய்து விற்பனை செய்கிறார்கள்‌. இதனால்‌ பல பொதுமக்கள்‌ அருகில்‌ பேருந்து நிலையம்‌ வரபோகிறது என்ற நோக்கத்தில்‌ ரூ.2
லட்சம்‌ மதிப்புள்ள நிலத்தை அதிக விலை வைத்து ரூ.10 இலட்சம்‌ வரை இந்த வீட்டுமனைகளை வாங்கி கொண்டார்கள்‌.

அந்த சமயத்தில்‌ அமைச்சர் அவர்களின்‌ வாய்மொழி உத்திரவின்‌ பேரில்‌ இந்த பேருந்து நிலையத்தை முடிக்காமல்‌ அப்படியே நிறுத்திவிட்டனர்‌. இதற்கு எந்த நிதியும்‌ வரவில்லை என கூறிவிட்டனர்‌. நிதியில்லை என்று கூறிவிட்டு தற்போது கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ செம்மொழி பூங்காவிற்கு ரூ.100 கோடி ஒதுக்கி பணிகள்‌ நடைபெற்று வருகிறது. வெள்ளலூர்‌ பேருந்து நிலையத்திற்கு ரூ.100 கோடி வரை செலவு செய்துவிட்டும்‌ மீதம்‌ ரூ.10 முதல்‌ ரூ.20 கோடி ரூபாய்‌ செலவு செய்தால்‌ பேருந்து நிலையம்‌ முழுமையடைந்து எங்கள்‌ பகுதி மக்களுக்கும்‌, பொது மக்களுக்கும்‌ உபயோகமாகும்‌ எங்களது பகுதிக்கும்‌ வளர்ச்சி பணிகள்‌ கிடைக்கும்‌.

அனைத்து பொது மக்களும்‌ எங்களது பகுதிகளுக்கு வந்து சென்றால்‌ எங்களது பகுதி மக்கள்‌ படும்‌ துன்பங்களும்‌ இந்த குப்பை கிடங்கிலிருந்து வரும்‌ துற்நாற்றமும்‌ வெளியே தெரியும்.‌ இதன்‌ மூலமாவது குப்பை கிடங்கினை சரியாக பராமரிப்பார்கள்‌ என்பதே எங்களது கோரிக்கை.

உக்கடம்‌ பேருந்து நிலையத்திலிருந்து தான்‌ பொள்ளாச்சி, பாலக்காடு செல்லும்‌ பேருந்துகள்‌ மற்றும்‌ நகர பேருந்துகளும்‌ இயக்கப்பட்டு வருகிறது. தற்போது உக்கடம்‌ முதல்‌ ஆத்துபாலம்‌ வரையிலான மேம்பால பணிகள்‌ நடைபெற்று வருகிறது. இதனால்‌ இந்த பேருந்து நிலையம்‌ முழுவதும்‌ மேம்பாலத்தால்‌ ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதனால்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌, ஆட்சியாளர்‌ அவர்களை பல முறை சந்தித்து உக்கடம்‌ பேருந்து நிலையத்தையாவது எங்களது வெள்ளலூர்‌ பேருந்து நிலையத்திலிருந்து இயக்கி கொள்ளுங்கள்‌ என்று எவ்வளவோ கெஞ்சி பார்த்துவிட்டோம்‌. மாநகராட்சியில்‌ நிதி இல்லை என்றால்‌ மக்கள்‌ பங்களிப்பு வேண்டும்‌ என்றாலும்‌ நமக்கு நாமே திட்டம்‌ மூலம்‌ நிதியை திரட்டி தருகிறோம்‌ என்றும்‌ கூறிவிட்டோம்.‌ அதற்கும்‌ எந்த ஒத்துழைப்பும்‌ தரவில்லை. அதனால்‌ எங்களை போன்ற தமிழகத்தில்‌ உள்ள அனைத்து NGOகளும்‌ எங்களது வாழ்வாதாரத்தை காக்க குரல்‌ கொடுக்க வேண்டும்‌ என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்‌.

நீங்கள்‌ ஒவ்வொருவரும்‌ எங்களுக்காக எழுப்பும்‌ குரல்‌ ஒரு மாபெரும்‌ சக்தியாக மாறி உறங்கி கொண்டிருக்கும்‌ ஆணையாளா்‌ கவனத்திற்கும்‌, மாவட்ட ஆட்சியாளர்‌ அவர்களின்‌ கவனத்திற்கும்‌ இதை தெரிந்தும்‌ எந்த நடவடிக்கையும்‌ எடுக்காமல்‌ இருக்கும்‌ அமைச்சரின்‌ கவனத்திற்கும்‌ மற்றும்‌ மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவாகளின்‌ கவனத்திற்கும்‌ எடுத்து செல்ல எங்களுக்கு உதவ வேண்டும்‌ என அன்போடு கேட்டுக்‌ கொள்கிறோம்‌, என தெரிவித்துள்ளனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 760

    0

    0