குப்பை பிரிக்கும் இயந்திரத்திற்குள் சிக்கிய இளைஞர் : நசுங்கிப் போன இரு கால்கள் ; வெள்ளலூர் குப்பை கிடங்கில் பகீர் சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
28 September 2023, 1:44 pm

சக ஊழியர்களின் அலட்சியத்தால் குப்பை பிரிக்கும் இயந்திரத்திற்குள் சிக்கிய ஊழியரை மீட்ட தீயணைப்புத்துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பையை உரமாக பிரிக்கும் எந்திரத்துக்குள் அங்கு வேலை செய்யும் கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சத்யா (23) என்பவர் எந்திரத்துக்குள் சென்று துடைத்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவர் இருப்பதை கவனிக்காமல் சக ஊழியர்கள் எந்திரத்தையும் சுவிட்ச்சை ஆன் செய்துள்ளனர். இதனால், சத்யா அந்த எந்திரத்துக்குள் சிக்கிக்கொண்டார். அதில் அவரது இரு கால்களும் எந்திரத்துக்குள் சிக்கியது.

பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு இயந்திரத்தை நிறுத்தி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை தெற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

பின்னர் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 512

    0

    0