தூய்மை இந்தியா திட்டத்தில் தாம்பரம்- ஆப்பூர், கோயம்புத்தூர்- வெள்ளலூர் குப்பை கிடங்குகளில் உள்ள திடக்கழிவுகளை உயிரி அகழாய்வு முறையில் அகற்றுவதற்கு ரூ.95 கோடியிலான திட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- 2021 அக்டோபர் 1-ம் தேதி தூய்மை இந்தியா திட்டம்(நகர்ப்புறம்) 2.0 தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களையும் தூய்மையாகவும் மற்றும் குப்பைகள் இல்லாத நகரங்களாகவும், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நகரங்களாகவும் மாற்றும்வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் 100 சதவீதம் திடக்கழிவுகளை அறிவியல் முறையில் தீர்வு செய்தல், உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்தல், கட்டுமானம் மற்றும் இடிப்பு கழிவுகளை திறம்பட மேலாண்மை செய்தல், நெகிழி கழிவு மேலாண்மை மற்றும் அனைத்து தேக்கத்திடக் கழிவுகள் கொட்டும் இடங்களையும் சரிசெய்வதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
பத்து ஆண்டுகளுக்கு மேல் தேங்கியுள்ள திடக்கழிவுகளை உயிரியல் அகழ்ந்தெடுத்தல் (Bio-mining) முறையில், சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வகையில் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீட்டெடுக்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியை நிலத்தின் தன்மைக்கேற்ப நகர்வனங்களாகவோ, பூங்காக்களாகவோ மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் ஆப்பூர் குப்பை கிடங்கில் 10 ஆண்டுகளுக்கும் மேலுள்ள பழைய தேக்கத்திட கழிவுகளை ரூ.35.99 கோடி மதிப்பீட்டிலும் கோயம்புத்தூர் மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கில் பத்தாண்டுகளுக்கு மேலுள்ள பழைய திட கழிவுகளை ரூ.58.54 கோடி மதிப்பீட்டிலும் உயிரி அகழாய்வு முறையில் அகற்ற மொத்தம் ரூ.94.53 கோடிக்குமுதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகஅனுமதி வழங்கி உத்தரவிட்டுஉள்ளார்.
இந்த திட்டங்களை செயல்படுத்துவதால் தாம்பரம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளை தூய்மையாகவும், குப்பை இல்லா நகரமாகவும் மாற்றலாம். இதன்மூலம் பசுமைவெளிகள், பூங்காக்கள், அந்நகர மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் வழிவகுக்கும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.