வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தல் ஒத்தி வைப்பு: அதிமுக.,வினர் மீது திமுகவினர் தாக்குதல்!!

Author: Rajesh
4 March 2022, 10:31 am

கோவை: வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றிய நிலையில் மறைமுக தேர்தலுக்கு சென்ற அதிமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மீதி திமுக.,வினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெள்ளலூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து வெள்ளலூர் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது. இந்த சூழலில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் வந்தவண்ணம் இருந்தன.

இந்த சூழலில், இன்று பேரூராட்சி தலைவரை தேர்வு செய்யும் மறைமுக தேர்தலுக்கு அதிமுக.,வினர் சென்று கொண்டிருதனர். அப்போது அந்த வாகனத்தை அடித்து நொறுக்கிய திமுக.,வினர் அதிமுக உறுப்பினர்களையும் தொண்டர்களையும் தாக்கினர்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் வாக்களிக்காமல் இருந்தால் திமுக பேரூராட்சியை கைப்பற்றும் என்பதால் இந்த செயலில் ஈடுபட்டதாக அதிமுக உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

இதனிடையே வெள்ளலூர் பேரூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 1472

    0

    0