வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம்.. கோவை மாநகராட்சிக்கு பரபரப்பு உத்தரவு போட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம்!!
கோவையில் வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் இருந்து வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு தினமும் 900 டன் முதல் 1000 டன் வரை குப்பைகள் சேகரித்து அனுப்பப்படுகின்றன.
அவ்வாறு அனுப்பப்படும் குப்பைகள் கிடங்கில் தரம் பிரிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. தினமும் அழிக்கப்படும் அளவை விட, அதிகமான குப்பைகள் குவித்து வருவதால், வெள்ளலூர் சுற்றுவட்டாரப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. பல ஆண்டுகளாக வெள்ளலூர் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் இந்த துர்நாற்றத்தில் சொல்லில் அடங்கா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
அதேவேளையில், கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு வரப்படும் குப்பைகளில் தினமும் 300 டன் குப்பைகள் வரை குறைக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் எனப்படும் நுண்ணுயிர் உரம் உற்பத்தி கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
உக்கடத்தில் அமைந்துள்ள மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் முறையாக செயல்படாத காரணத்தினால், குப்பைகள் அதிகளவில் சேகாரமாகி வருகின்றன. 2022ம் ஆண்டு குப்பைகளை தரம் பிரித்து அழிக்க வேண்டும் என்று இந்த நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சி உத்தரவிட்டிருந்த நிலையில், இயந்திரம் பழுது காரணமாக இந்தப் பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஆனால், பல ஆண்டுகளாக குப்பைகளை கையாளுவதில் அனுபவம் கொண்டதாக கோவை மாநகராட்சி கூறும் இந்த ஒப்பந்ததாரர், மாநகராட்சி போன்ற பெரிய அளவிலான பகுதிகளில் குப்பைகளை கையாளும் அனுபவம் கிடையாது என்று கூறப்படுகிறது. அதாவது, பஞ்சாயத்து அளவிலான குப்பைகளை அகற்றும் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வந்ததாகவும் சொல்லப்படும் நிலையில், கோவை மாநகராட்சி போன்ற பெரிய நகரை எப்படி கையாள முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாநகராட்சிக்கு விளக்கம் கேட்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பியது.
பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில் கடந்த 22ஆம் தேதி கோவை மாநகராட்சி தீர்ப்பாயம் உத்தரவி ஒன்றை போட்டுள்ளது.
அதில், குப்பைகளை அகற்ற அரசு ஒதுக்கும் நிதிக்காக கோவை மாநகராட்சி காத்திருப்பதாகவும், குப்பைகளை அகற்ற நவீன முறைகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கரிம கழிவு உறை நிறுவுதல், கரிம கழிவுகளை பிரிக்க அப்பகுதி மக்களுக்கு முறையாக எடுத்துக் கூறி கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் கோவை மாநகராட்சி இதுவரை முறையான பதில் எதுவும் அளிக்கவில்லை.
கடந்த 2023ம் வரும் நவம்பர் மாதத்திற்கு பின் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத கோவை மாநகராட்சி விரைவாக நடவடிக்கை எடுத்து வெள்ளலூர் நிலத்தை மீட்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் மீது அடுத்த விசாரணை வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
This website uses cookies.