வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க சென்ற பக்தர்… மலையேற மலையேற மயங்கி விழுந்து பலி..!!

Author: Babu Lakshmanan
15 ஏப்ரல் 2022, 8:35 மணி
Quick Share

கோவை: வெள்ளியங்கிரி ஆண்டவர் சாமி தரிசனத்திற்க்காக மலையில் நடைபயணம் மேற்கொண்ட நபர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த பூண்டி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 7 மலைகளை கடந்து வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழ் புத்தாண்டான சித்திரை மாதத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து மலைகளில் நடைபயணம் மேற்கொண்டு தரிசனம் செய்வது வழக்கம் .

அந்த வகையில், தஞ்சாவூரை சேர்ந்த கரிகாலன் என்பவர் நடை பயணம் மேற்கொள்ளும் போது வெள்ளியங்கிரி இரண்டாவது மலையில் திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலயே உரிழந்துள்ளார். இதனை அடுத்து சக நண்பர்கள் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Roja முதலமைச்சர் பதவியில் நீங்க உட்காருங்க.. துணை முதலமைச்சர் நடிகை வைத்த கோரிக்கை!
  • Views: - 1448

    0

    0